சற்று
நேரத்திற்கு முன்னதாக , வெளியாகியுள்ள அறிக்கையின் படி இந்தியப் பிரதமர்
மன்மோகன் சிங் இலங்கை செல்லமாட்டார் என்று அறியப்படுகிறது. இந்திய
அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையின் சுட்டறிக்கை ஒன்றை ஆதாரம் காட்டி இந்திய
ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள
பாரிய அழுத்தம் காரணமாகவும், காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரின் அழுத்தம்
காரணமாகவுமே இம் முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பலமான
பின்புலம் ஒன்றும் உள்ளது. தற்போது உள்ள சூழ் நிலையில், இந்திய
எதிர்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில்
அதிகரித்துள்ளதோடு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு படு
வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை சமீபத்திய கருத்துக் கணிப்பும் உறுதிசெய்கிறது.மன்மோகன் சிங் இலங்கை செல்வாரேயானால், நடக்கவிருக்கும் லோக்ஸ்சபா தேர்த்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் மண் கவ்வும். தற்போது கூட 1 அல்லது 2 ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்பு தான் இருக்கிறது. ஆனால் இலங்கையில் நடக்கும் மாநாட்டிற்கு மன்மோகன் சென்றால், கிடைக்கவிருக்கும் அந்த ஒன்று இரண்டு ஆசனங்களும் கிடைக்காமல் போய்விடும். இதன் காரணமாகவே மன்மோகச் சிங்- சோணியா என்ன செய்வது என்று தெரியாது குழப்பத்தில் இருந்தார்கள். ஆட்சியா இல்லை அண்டை நாட்டு நட்பா ? என்று வரும்போது அவரவருக்கு ஆட்சி தானே முக்கியமாக இருக்கும். நாற்காலி இல்லை என்றால் நட்பு எங்கே ? இருப்பினும் இப்படியான செய்திகளை பரப்பிவிட்டு, பின்னர் திடீரென மன்மோகன் இலங்கை சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment