சென்னை கிண்டியில் சிட்கோ தலைமையக கட்டிடத்தை முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்கள் துறை சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், சிட்கோ தலைமையக
கட்டிடம்
, தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன நவீன பயிற்சி வளாகம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில் கிண்டி தொழிற்பேட்டையில் ரூபாய் 54 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சிட்கோ தலைமையக கட்டிடத்தையும், ரூபாய் 5 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன நவீன பயிற்சி வளாகத்தையும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதுதவிர திருப்பூர், நாகை, நாமக்கல், திருவாரூர், தேனி ஆகிய 5 மாவட்ட தொழில் மையங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, தஞ்சை, வேலூர் ஆகிய 7 மாவட்ட தொழில் மையங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட வெள்ளி விழா கலையரங்கம், கோவையில் தாய் சேய் தீவிர சிகிச்சை பிரிவு, பாடியநல்லூரில் 24 மணி நேர இலவச மருத்துவ முதலுதவி சேவை மையம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மருத்துவ வசதிகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment