
ராமேஸ்வரம் : கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டுத்தர வேண்டும்,
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுக்க வேண்டும், மீனவர்கள் இனி
கைது செய்யப்பட மாட்டார்கள் என உறுதி அளிக்க வேண்டும் எனபன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 21ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில்
ஈடுபட உள்ளதாக ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழக
மீனவர்கள் அறிவித்துள்ளனர். விசைபடகுகளின் ஆவணங்களையம் ஆட்சியரிடம்
ஒப்படைக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கையை
வலியுறுத்தி மீன்வளத்துறை அலுவலகத்தையும் அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment