
இதேவேளை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சில் எந்த பதவியும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாகவே பொன்சேகாவின் மருமகன் உறவினரான தனுன திலகரட்ணவிற்கு பினைவழங்கப்பட்டதாகவும்,அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரை அரசுடன் சேருமாறு அழுத்தம் கொடுப்பதாகவும், தகவல்வெளியாகியுள்ளன.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் சரத்பொன்சேகா நேற்று தீவிரமாக ஆராய்ந்துள்ளார், இந்த பேச்சுக்களில் திருப்தி அடையாவிட்டால் அவர் கட்சியை கலைத்துவிட்டு அவர் அடுத்த சில நாட்களில் அரசாங்கத்துடன் இணையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை இந்தத் தகவல்கள் குறித்து பொன்சேகா தரப்பினர் மறுத்து உள்ளதோடு திட்டமிட்ட வகையில் எதிர்த்தரப்பை பலவீகமடையச் செய்யும் செய்தி இதுவெனத் தெரிவித்துள்ளது....
No comments:
Post a Comment