Tuesday, December 30, 2014

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அவசர வேண்டுகோள்!

காலங்காலமாக எமது மக்கள் அனுபவித்த அவலங்கள், சாவும் அழிவுமாக அவர்கள் சந்தித்த அநர்த்தங்கள், சோகத்தின் சுமையால் அவர்கள் சிந்திய கண்ணீர் இவையெல்லாம் பௌத்த தேசத்தின் கருண்யத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை.
                                                                               - தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் -
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடும் அவசர வேண்டுகோள் அன்பான தமிழீழ மக்களே !
மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன. ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளார்கள். ஆயிரகக்ணகக்கான குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டுநீங்கி இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். வயல் நிலங்கள், தோட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து வசதிகள், கழிப்பறை வசதிகள் அற்ற நிலையிலும் உணவு, சுத்தமான குடிநீர் அற்ற நிலையிலும், எதுவித சுகாதார வசதிகள்ளற்ற நிலையில் தொற்று நோய் பரவும் சூழலில் எமது மக்கள் அல்லல் உற்றுக் கொணடு; இருக்கின்றார்கள்.


இவர்களுக்கான நிவாரண உதவிகளும், மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே சிறிலங்கா அரசால் விநியோகிக்கப்படுகின்றன. இவர்களுக்கான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அனைத்து ஆலயங்கள், சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், ஊர்சச்ங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஏனைய அமைப்புகளிடம் இருந்தும் உதவிகளை உரிமையுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு வேணடி நிற்கிறது.
எமது தேசத்தின் மக்களுக்கு சிங்கள அரசு வாழ்வுரிமையை புறக்கணித்து, உயிர் வாழ்விற்கே அச்சுறுத்தல் கொடுத்துக்கொண்டு இருக்கும் போது நாம் தான் உதவிவழங்க வேணடியவர்களாக உள்ளோம். அனைவரும் உதவிக்கரம் நீட்டுவோம். எமது மக்களை அவலத்தில் இருந்து மீட்டிடுவோம்.
தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தொலைபேசி : 01 43 15 04 21
மினன்ஞ்சல்: cctfrance@yahoo.fr

No comments:

Post a Comment