வெளிநாட்டில் இருந்து அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படும் தமிழ்
இளைஞர்களை. மற்றும் உள்நாட்டில் சந்தேகத்தின்
பேரில் கைதாகும் தமிழ் இளைஞர்களை 4ம் மாடிக்கு கொண்டு சென்று பல சித்திரவதை புரிந்த புலனாய்வு
துறை அதிகாரி மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களில் ஒருவரான “சந்திர வாகிஸ்ட” வேலை பறிபோயுள்ளது என அதிர்வு இணையம்
அறிகிறது. தமிழ் இளைஞர்களை இவர் நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்க விட்டு பல சித்திரவதைகளை
செய்துள்ளார். இவர் மீது உள்ள பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இது தொடட்பாக விசாரணை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ள நிலையில், சந்திர வாகிஸ்ட வெறு வழியின்றி தனது வேலையை தாமே ராஜினாமாச் செய்துள்ளார். அவர் நாட்டை விட்டு மெதுவாக தப்பியோடக் கூடும் என்று கூறப்படுகிறது. குறித்த இந்த நபரை பல தமிழ் இளைஞர்கள் அடையாளம் காணுவார்கள். பிரித்தானியாவில் இருந்து 2007ல் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரை வாகிஸ்ட கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கினார். பின்னர் விடுதலையான அன் நபர் , காயங்களோடு கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவராலயம் சென்று தனக்கு நடந்த கொடுமைகளை காட்டியுள்ளார். மன்னிப்பு கோரிய அதிகாரிகள் அவருக்கு உடனடியாக விசா வழங்கி , அவரை இலங்கையில் இருந்து மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிவைத்தார்கள்.
இதுபோன்ற பல குற்றச் செயல்களில் வாகிஸ்ட ஈடுபட்டு வந்தார். தற்போது இவருக்கு இலங்கையில் எந்த பவரும் இல்லை. பியூஸ் பிடுங்கிய நிலையில் உள்ளார். இவர் மீது பாதிக்கப்பட்ட எவரும் வழக்கை தொடரலாம். தேவை என்றால் வாகிஸ்ட தொடர்பான அனைத்து தகவல்களையும் , பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதிர்வு இணையம் கொடுத்து உதவும்source:athirvu
No comments:
Post a Comment