Friday, January 23, 2015

மாட்டிக்கொண்டது கோட்டபாயவின் வெள்ளை வேன் !


கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பகுதி ஒன்று உண்டு. ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி, இந்த உயர் பாதுகாப்பு வலயம் போடப்பட்டுள்ளது. பல வீதிகள், சிறிய பூங்கா உட்பட பல இடங்களுக்கு சாதாரண மக்கள் செல்லவே முடியாது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் அந்த இடம் கடந்த 10 வருடங்களாக உள்ளது. இதனை நேற்றைய தினம்(22) மைத்திரி திறந்துவிட்டார். இனி உயர்பாதுகாப்பு வலையம் என்று ஒன்றும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து அங்கே சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் திகைத்துப்போனார்கள். கோடிக்கணக்கான பெறுமதி மிக்க வாகனங்கள் அங்கே உள்ள சிறிய பூங்கா ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சட்ட விரோதமான முறையில் அங்கே நிறுத்திவைக்கபப்ட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள இலக்கத் தகடுகள் போலியானவை. மேலும் இலக்கத்தகடுகள் அற்ற வெள்ளை வேன்களும் அங்கே தான் நிற்கிறது. கொழும்பிலும் பல இடங்களிலும் தமிழர்களையும் முஸ்லீம்களையும் மற்றும் அரசுக்கு எதிராகச் செயல்படும் சிங்களவர்களையும் வெள்ளை வேனில் வருபவர்கள் தான் கடத்திச் செல்வது வழக்கம். இவ்வாறு வெள்ளை வேனில் கடத்தப்பட்ட பலர் பின்னர் பிணமாகத் தான் மீட்க்கப்பட்டார்கள். ஒரு சிலரே பலத்த அடி காயங்களோடு உயிரோடு திரும்பினார்கள். இன் நிலையில் இதுபோன்ற இலக்க தகடுகள் அற்ற வெளை வேன்கள் ஏன், மகிந்த வசித்துவந்த இடத்தில் இருக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?
இந்த வீதிகளில் நிரையாக அடுக்கி விடப்பட்டு இருந்த வாகனங்கள், தூசி படிந்தனவாக காணப்பட்டதாகவும், வெள்ளை வான்கள், வெள்ளை டிறக்குகள், கறுப்பு மற்றும் வேறு நிறங்களிலான வாகனங்கள், இலக்கத் தகடு உள்ளவை, இலக்கத் தகடுகள் அற்றவை, புதியவை, பழையவை என பலவித வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்ததால் பாவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் ஜோன் அமரதுங்க இவை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பாவிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு உள்ளார். உயர்பாதுகாப்பு வலையங்கள் எனக் கூறப்பட்டு மூடப்பட்ட வீதிகளில் எதற்காக இவ்வளவு தொகை வாகனங்கள் நிரைப்படுத்தப்பட்டு இருப்பதாக கேள்ளி எழுப்பிய ஜோன் அமரதுங்க இவை பற்றிய முழு விசாரணைகள் இடம்பெறும் எனவும் பின்னர் அவை குறித்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


source:athirvu












No comments:

Post a Comment