
அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சட்டப்படி போராடி தற்போது அதிலிருந்து விடுதலையாகி வந்துள்ளமையானது ஈழத்தமிழர்களாகிய எமக்கும் கிடைத்த மிகப் பெருவெற்றியே ஆகும். அண்மைக் காலங்காலங்களில் எமது இனத்திற்கு ஆதரவாக நிற்பதற்கு ஒரு சரியான தலைமை இல்லையே என ஏங்கிக்கொண்டு அம்மாவின் விடுதலைத் தேதிக்காக நாமும் காத்துக்கிடந்தோம்.
வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றிய அறிக்கை வெளியாக உள்ள தருணத்தில் அம்மாவின் விடுதலைச் செய்தியானது தமிழர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். அவரின் குரல் மறுபடியும் தமிழ்மக்களுக்காக இந்தியாவில் ஓங்கி ஒலிக்கும் என்று அனைத்து தமிழ் மக்களும் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் உள்ளார்கள்.
விரைவில் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு எமது வாழ்த்துக்கள்.
நன்றி
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
No comments:
Post a Comment