Thursday, June 18, 2015

அவுஸ்திரேலியாவின் களவு அம்பலம்: இதோ முதன் முதலாக புகைப்படம் வெளியானது !


அகதிகளை கடத்திச் சென்ற ஆட்கடத்தல் காரர்களுக்கு அவுஸ்திரேலியா லஞ்சம் வழங்கியதை இந்தோனேசியா நிரூபித்துள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கியதாகக் கூறப்படும் பணத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்தோனேசியா நிரூபித்துள்ளது. 54 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பவென அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் லஞ்சம் வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவுஸ்திரேலியா மறுத்தது.
எனினும் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு
வழங்கப்பட்டதாக கூறப்படும் பல ஆயிரக்கணக்கான அமெரிக்க டொலர்களை இந்தோனேசிய அதிகாரிகள் காணப்பித்துள்ளதாக ´சிட்னி மோனிங் ஹெரல்ட்´ ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தோனேசிய நுஸா டென்காரா திமுர் மாகாணத்தின் பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனரல் என்ட்டாங் சுன்ஜாயா இந்த பணத்தை காணப்பிக்கும் புகைப்படத்தையும் அவுஸ்திரேலிய ஊடகம் வெளியிட்டுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் கட்டாயம் பதில் கூற வேண்டும் என பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார். கடத்தல்காரர்கள் 6 பேரும் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் இருந்து பணம் பெற்றதை ஏற்றுக் கொண்டுள்ளதாக இந்தோனேசியா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது விடயம் தொடர்பாக ஜகார்த்தாவில் உள்ள பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் மனிதாபிமானம் குறித்து கேள்வி எழுவதாக திமுர் மாகாண கடத்தல்களுக்கு எதிரான அமைப்பின் தலைவர் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார். கடத்தல்காரர்கள் 6 பேரையும் விசாரணை செய்த அவர், அதில் முதன்மை மாலுமியான யொஹான்ஸ் என்பவர், அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் பணத்தை பெற மறுத்ததுடன் அகதிகளை நியூஸிலாந்துக்கு கொண்டு செல்ல துணிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரியான ஆகஸ் என்பவர் தொடர்ந்தும் பேச்சு நடத்தி யோஹான்ஸூக்கு 5000 டொலர்களை வழங்கியதாகவும் விசாரணையாளர் தெரிவித்துள்ளார்.

source:thirvu

No comments:

Post a Comment