Sunday, January 30, 2011

மஹிந்தரை காக்காய் பிடிக்கும் கருணாநிதியும், மாமா வேலை பார்க்கும் தொண்டைமானும்!


கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக கடும் எதிர்ப்புப் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வந்த இந்தியாவின் தமிழ்நாடு மாநில முதலமைச்சர் மு.கருணாநிதி திடீர் குத்துக் கரணம் அடித்து உள்ளார்.

இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் மிகவும் நெருக்கமான முறையில் நல்லுறவை வளர்த்தெடுக்கின்றமையில் அண்மைய காலங்களில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார். இருவருக்கும் இடையிலான நல்லெண்ண தூதுவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் செயல்பட்டு வருகின்றார்.

இவர் தமிழ்நாடு மாநிலத்துக்கு அடிக்கடி விஜயம் செய்து வருகின்றமையும் அப்போது எல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செய்திகளை கருணாநிதிக்கு கொண்டு செல்கின்றமையும் தொடர்கின்றது. அதே போல கருணாநிதியின் செய்திகளையும் காவிக் கொண்டு மஹிந்தரிடம் வருகின்றார்.

கருணாநிதிக்கும், மஹிந்தருக்கும் இடையிலான நட்பு இருவரும் தொலைபேசியில் பரஸ்பரம் உரையாடி அடிக்கடி குசேலம் விசாரித்துக் கொள்கின்ற அளவுக்கு வளர்ந்து உள்ளது. தொண்டைமானை கருணாநிதிக்கும் மஹிந்தருக்கும் இடையிலான தூதுவராக செயல்பட வைத்த பெருமை திராவிட முன்னேற்ற கழக எம்.பி கனிமொழியையையே சேரும்.

கனிமொழிக்கும் தொண்டைமானுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவுகள் மிகவும் நெருக்கமானவை. இலங்கைக்கு வருகை தந்திருந்த கனிமொழியின் அன்புக் கட்டளையை ஏற்றே தொண்டைமான் தூதுவர் பொறுப்பை பெற்றுக் கொண்டார்.

2 comments:

  1. karunanithi thamil endra molzhiyai vayithu thanathu katchiyai sulchiyana murayil valarthu kondu ippothu thamilarkalukae throgam illayitha oru thariketta kullanari..... tamil makkal avanai thukiyeriya karanam avan thamilarkaluku seitha throgamthan

    ReplyDelete
  2. illathil ulla nam thamil sonthankalukaka entha ethirparpum illamal evarukum anjamal theviya thirumagam pasumpon devar ayya valzhi vantha enga pasathiruku uriya mathipirkuriya NAGAIMUGAN ayya avarkaluku en thal panintha nandriyai therivithu kolkiraen.... ennaiyum intha paniyil inaithu kolla virumpukuraen ayya....

    Kalaiarasan (9677143652)

    ReplyDelete