apple-salad-forkஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. ஆனால் அவற்றை பின்பற்றுவதுதான் சற்று கடினம்.
நாம் உண்ணும் உணவானது உடல் வளர்ச்சிக்கு உதவினாலும் அதிலுள்ள சிலப் பொருட்கள் வயிற்று உபாதையை ஏற்படுத்திவிடுகின்றன. நம் உணவிலுள்ள சிலப் பொருட்கள் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு சுவையாகவும் இருப்பதில்லை. இவ்வாறு உணவில் பலப் பிரச்சனைகள் உள்ளதால் நாம் சமைத்த உணவை விரும்பி சாப்பிடுவதை விட இயற்கையாக கிடைக்கும் பழம், கிழங்கு போன்றவற்றை சாப்பிடுவதைதான் அதிகம் விரும்புகிறோம். அவ்வாறு உட்கொள்ளும் சிலப் பழங்களும் நமக்கு எப்பொழுதும் ருசியாக இருப்பதில்லை. அதிகமாக உட்கொண்டால் திகட்டக்கூடிய பழங்கள் அல்லது புளிக்கக்கூடிய பழங்கள்தான் உண்டு. ஆகவே சில நேரங்களில் தொடர்ந்து பழங்களை சாப்பிடுவதும் கூட சலிப்பு தட்ட ஆரம்பித்துவிடும்.