Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Tuesday, May 19, 2015

சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது!

நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..(உண்மைச் சம்பவம்)

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.
அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, அவர்களின் வலிகளோடு இறுதி

Tuesday, May 12, 2015

வெல்லும் மொழி எது?

First Published : 12 May 2015 12:49 AM IST
உலகம் முழுவதிலும் சிலர் தங்களின் தாய்மொழியைக் கைவிட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப் பயன்படும் என்று கருதும் மொழியைப் படிக்கிறார்கள். அது கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக அதிகமாக இருந்து வருகிறது. தாய்மொழி ஓர் அடையாளம் என்றும், அவசியமில்லாதது என்றும் கருதி வருகிறார்கள். அது ஏழ்மையான நாடுகளிலும், வளர்ச்சி அடையும் நாடுகளிலும் பொதுப் பண்பாக இருந்து வருகிறது.
 ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பிய நாட்டினர், புதிய நிலப் பகுதிகளையும், தங்கம், வெள்ளி, நறுமணப் பொருள்களையும் தேடிக் கடல் வழியாக மாலுமிகளையும், ஆள்களையும் அனுப்பினார்கள். அட்லாண்டிக், பசிபிக் சமுத்திரங்களிலும், இந்து மகா சமுத்திரத்திலும் பயணித்துப் புதிய நாடுகளைக் கண்டறிந்த அவர்கள் அவற்றைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டார்கள். தங்கள் மொழியை புதிய நாடுகளின் தேசிய மொழியாக்கிவிட்டார்கள். அதனால், பல நாடுகளில் ஆதிமக்கள் மொழிகள் அழிந்து ஒழிந்துவிட்டன.

Saturday, May 09, 2015

தமிழ்த்தேசியத்தை அடகுவைத்து அரசியல் செய்யும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை!! - ஈழத்தமிழ் இளையோர் அமைப்பு

ஒரு மாபெரும் இன அழிப்பு நடைபெற்ற காயங்கள் இன்னமும் ஆறவில்லை ஆனாலும் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன நேற்று நடந்ததைப்போல நெஞ்சத்தில் அந்த நினைவுகள் முட்களைப்போல நெருடிக்கொண்டிருக்கின்றன கண்ணைத்திறந்தாலும் மூடினாலும் அவலங்களின்  அந்த நாட்கள்
கண்ணைவிட்டு அகலாது  கண்ணுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கின்றன .

அபிவிருத்தி என்றும் நல்லாட்சி என்றும் கூறியபடி சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் புதியவர் ஒருவர் இப்போது அமர்ந்துகொண்டுள்ளார் ஆனாலும் தமிழர்களின் நிலை என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன?சிங்களதேசத்தின் கொடிய இனவெறி இரானுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கனக்காண மக்களின் அழிவுக்கு நீதி கிடைக்குமா? வெள்ளிவிழா கண்டதமிழனின் இனவிடுதலைப்போராட்டம் நாளை என்னவாகும் ? தமிழினத்தின் தலைகள் நிமிருமா?அல்லது அவலங்கள் நீண்டுசெல்லுமா?

Wednesday, April 29, 2015

தமிழ் மொழியின் எழுத்தமைதி

தொல்காப்பியர் அகர முதல னகரம் இறுவாய் எழுத்துகள் முப்பது என்றும் (உயிர் - 12, புள்ளியிட்டு எழுதப்படும் மெய் -18), இவைதவிர, சார்ந்து வரும் புள்ளியிட்டு எழுதப்படும் ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகிய மூன்று சார்பு எழுத்துகளையும் கூறியுள்ளார். சார்பெழுத்துகளுக்குப் புள்ளியிட்டு எழுதும் பழக்கம் 12-ஆம் நுற்றாண்டுக்கு முன்பே நின்றுவிட்டது. ஆக 31 எழுத்துகளே இன்று தமிழ் எழுத்துகள் ஆகின்றன.
மெய் எழுத்துகளோடு உயிர் எழுத்துகள் கூடிவரும் என்று தொல்காப்பியர் கூறினாலும் 216 உயிர்மெய் எழுத்துகள் வரும் எனத் தொகை கூறவில்லை. 194 உயிர்மெய் எழுத்துகளே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆயினும், அவற்றை எழுத 102 குறியீட்டெழுத்தே பயன்பாட்டில் இருந்தன. இப்பொழுது 63 வடிவங்களே உயிர்மெய் வடிவ எழுத்தாக வருகின்றன. 63+31 = 94 குறியீடுகள் எழுதப்பயன்படுகின்றன. கு, கூ வரிசைகளுக்குத் தனி உயிர் குறியீடு கொடுக்கும் போது 29+31=60 வடிவங்களே தமிழுக்கு வரும்.
நமக்குத் தெரியவரும் எல்லா மொழிச் சொற்களையும் வழக்கில் இருக்கும் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுத முடியும். தமிழ் எழுத்துகளின் இயல்பு, சொற்களின் அமைப்பு, தொடர் அமைப்பு, மொழியின் உயிர்நிலை புரியாதவரே ஜ ஷ ஸ ஹ க்ஷ என்னும் கிரந்த எழுத்துகளை ஏற்க விரும்புகிறார்கள்.

Monday, March 09, 2015

சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழத் தமிழினம்.?

Ltte-02இந்தப் பூமி பந்தின் அசைக்க முடியாத சக்தியாக, ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன் பலம் மிக்க அமைப்பாக தமிழர் சேனை 30 வருடங்களுக்கு மேலாக மாவீரர், போராளிகளது வியர்வையாலும், இரத்ததாலும், தியாகங்களாலும் கட்டி வளத்த அமைப்பு
மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்து போனது??
இதன் பின்னால் கண்ணுக்கு தெரியாத சதி வலைகள் பின்னப்பட்டிருந்தது. முக்கியமாக மூன்று நாடுகளின் கரம் நீண்டிருந்தது அதை ஒவொன்றாக பார்ப்போம்.

Thursday, January 29, 2015

The Lanka question

Kuldip NayarNew Delhi has lots to explain when Mohinder Rajpaksa was reelected as Sri Lanka’s President for the second time. India had supplied him small arms which he liberally used to kill the Tamils, the largest minority in that country. He should have been tried for war crimes because he killed 40,000 Tamils in cold blood even after the surrender by what was then called the LTTE, the militant face of Tamils in the Northern Sri Lanka.
That he tried to woo both military and police chiefs to stay back even after the defeat show. This shows how adroitly he led a democratic India up to a garden path. Yet New Delhi should have known what 

Kuldip Nayar

Kuldip Nayar is a veteran Indian journalist, human rights activist and a noted author.

Saturday, January 24, 2015

ஆன்மா சாந்தியடையாது!

By ஆசிரியர்

First Published : 24 January 2015 02:54 AM IST
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கைகோத்து மாணவர்களும் களத்தில் குதித்த நாள் 25, ஜனவரி 1965. அரை நூற்றாண்டு காலம் ஓடி முடிந்துவிட்டது. மொழிப்போர் தியாகிகளுக்காக கூட்டங்கள் நடத்தும் திராவிடக் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள், இந்த நாளை மிகப்பெரிய அளவில் விழாவெடுத்து கொண்டாட இருக்கின்றன.
ஹிந்தி எதிர்ப்பின் அடிப்படை நோக்கம், பல மொழிகளைக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஹிந்தி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டால், ஹிந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டால், எல்லா மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழியை அழித்தொழிக்கும் முயற்சியாக அது அமைந்துவிடும் என்பதுதான்.

Sunday, December 21, 2014

புலிகள் இந்தியாவிலும் தமிழீழம் கேட்கிறார்கள் எனக் கூறலாமா? ‘றோ’ ஆடும் பொய்க்கால் குதிரையாட்டம்!

இந்தியாவின் உளவுத்துறையான ‘றோ’ தாயகத் தமிழருடன் கடுமையான பகைமை கொண்டு செயற்படுகின்றது. அவர்களின் நாளாந்த வாழ்வைச் சிதைவுபடுத்துவதிலே ‘றோ’ தன் கவனத்தைப் பதித்துள்ளது.

 இதற்கான பல ஆதரங்களை இங்கு நாம் முன்வைக்க முடியும். அதன் உச்சக்கட்டமாக 2009ம் ஆண்டு போரின்போது இடம்பெற்ற இனப்படுகொலையைக் குறிப்பிட முடியும். மிகப் பரவலான முறையில் அச்சமயம் தாயகத்தில் ‘றோ’வின் பிரசன்னம் காணப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் இந்திய ஊடுருவல்களை மிக இரகசியமாக அறிந்து இந்திய தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கொடுப்பதே ‘றோ’வின் அதிமுக்கிய கடமையாகும். ஆனால் ‘றோ’ கடந்த பல ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செற்பாடுகள் குறித்தும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துவரும் நிறுவனமாக மாத்திரமே இயங்கி வருவது இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.

Wednesday, June 04, 2014

மண்மகள் அறியா வண்ணச் சீரடி

By அ. வெண்ணிலா

First Published : 04 June 2014 01:44 AM IST
Dinamani
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள இடம் மங்கலதேவிக் கோட்டம். தேனி மாவட்டம் கூடலூர் வண்ணாத்திப் பாறை காப்புகாடு வனப்பகுதியில் பளியன்குடியில் இருந்து ஆறாவது கிலோமீட்டரிலும், கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் இருந்து பதினைந்தாவது கிலோமீட்டரிலும் அமைந்துள்ளது மங்கலதேவிக் கோவில். இதுவே கண்ணகிக் கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
கி.பி.144ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் (கி.மு. சுப்ரமணியம் பிள்ளை கணிப்பின்படி) ஆடிமாத தேய்பிறையின் வெள்ளிக்கிழமையன்று மதுரையை எரித்த கண்ணகி பதினான்கு நாள்கள் நடந்துவந்து சேர்ந்த இடமே இந்த மங்கலதேவிக் கோட்டம்.
தலைவிரி கோலமாக அழுது வந்தவள் ஒரு வேங்கை மரத்தடியினில் நின்று தன் கணவனுடன் சேர வேண்டுகிறாள். அப்பொழுது அங்குப் புஷ்பக விமானத்தில் வந்த கோவலனுடன் கண்ணகி விண்ணுலகம் சென்றாள் என்று சிலப்பதிகாரம் சொல்லுகிறது.

Wednesday, May 07, 2014

கிணறு வெட்டுவோம்

இப்போதெல்லாம் மூன்று கிலோமீட்டர் பயணிப்பதற்குள் நான்கு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதைப் பார்க்க முடிகிறது. பல இடங்களில் ஆயிரம் அடி வரை ஆழ்குழாய் கிணறு தோண்டியும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுதான்.
ஆழ்குழாய் கிணறு என்ற பெயரில் பூமித்தாயின் உடல் முழுவதும் துளை போட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால்தான் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சேமிப்பதைவிட சேமித்ததை பாதுகாப்பது மிக முக்கியம்.
நகரங்களில்தான் ஆழ்குழாய் கிணறுகள் அதிகரிக்கின்றன என்பதில்லை. கிராமங்களிலும் அதன் ஆக்டோபஸ் கரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதற்கு அண்மைக்கால உதாரணம் தேனி மாவட்டம்.

Monday, April 28, 2014

வீரபாண்டிய கட்டபொம்மன்:இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.

03-2வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

நெஞ்சம் நிறைந்த 4ம் ஆண்டு நினைவலைகள் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா!….

Velupillai-01‘வரலாற்று மூலமாய்’ திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா!…. ஒரு நாட்டினது அல்லதுஇனத்தினது வரலாற்றை அறிவதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்சியாளர்கள் நாடுவது சான்றுகளேயாகும். இவை புரதான கட்டிடங்கள, சிற்பங்கள், கோயில்கள், ஓவியங்கள், ஏட்டுச் சுவடிகள், நூல்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், எனப்பலவகைப்படும். இவைகள் யாவும் தொல்லியற்சான்றுகள் எனப்படும். இவை வரலாற்று மூலங்களாய் நின்று அந்தநாட்டின் அல்லது மறைந்த சாம்ராஜ்சியங்களின் தொன்மையை பெருமையை அறியவைக்கும் சான்றுகளாகின்றன. இவ்வகையில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்கோவில் எனப்படும் ‘தஞ்சைப்பெருங்கோவில்’ என்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த இராஜஇராஜசோழனதும் சோழ சாம்ராஜ்சியத்தினதும் அன்று வாழ்ந்த தமிழரின் பெருமையையும்  சந்தேகத்திற்கு  இடமின்றி  நிரூபிக்கும்  சான்றாக என்றும் விளங்குகின்றது.

Wednesday, April 23, 2014

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு! சித்திரை முதல்நாள் சித்திரைப் புத்தாண்டு என்று கொண்டாடலாம்! நக்கீரன்

சித்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக இந்துசமயத் தமிழர்கள் கொண்டாடி வந்திருக்கின்றனர். அது எப்போது தொடக்கம் கொண்டாடப்பட்டு வருசிறது என்பது தெரியாவிட்டாலும் அதன் காலம் இருநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள எவனும் அவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இந்த 60 ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

Tuesday, April 22, 2014

காப்போம் ஜனநாயகத்தை! சாய்ப்போம் சர்வாதிகாரத்தை!!

சுதந்திர இந்தியா பிரிட்டிஷ் நாடாளுமன்ற சனநாயக முறையைப் பின்பற்ற வேண்டும் என நேருவும் மற்ற தலைவர்களும் முடிவு செய்தனர். சொத்துரிமை உடையவர்களுக்கே வாக்குரிமை என்ற நிலையை மாற்றி வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டுமென பிரதமர் நேரு விரும்பியபோது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் திடுக்கிட்டார்.
600 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வாக்குரிமை என்பது படிப்படியாகத்தான் கொடுக்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய மவுண்ட் பேட்டன் "பெரும்பாலும் படிப்பறிவற்ற இந்தியாவில் வாக்குரிமையின் அருமை தெரியாது தவறாகப்  பயன்படுத்துவார்களானால் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுவிடும். வேண்டாம் இந்த விஷப்பரீட்சை' என எச்சரித்தார்.

Wednesday, April 02, 2014

அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 01

மிகப்பெரிய வல்லரசுகள்கூட மென்பல அரசியல் முலம் பொருளாதார அழுத்தங்களை உருவாக்குவது, சிறிய அரசுகளை அனைத்துலக அரசியலில் தனிமைப்படுத்துவது, அனைத்துலக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றுவது, என பல்வேறு இரசதந்திர சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி.

கடந்த மாதம் இடம் பெற்ற ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் அனைத்துலக நகர்வுகளின் மத்தியிலே குறிப்பாக அமெரிக்க இந்திய அரச நலன்களினதும் இதர எதிர்த்தரப்பு வல்லரசுகளின் நலன்களினதும் அரசியல் மேலாதிக்க போட்டிகளின் மத்தியில் தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு போராடும் நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இலங்கைப் பூனையைப் பார்த்து பயந்து நடுங்குகிறது இந்தியப் புலி – தினமணி ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.
12 நாடுகள் ஆதரிக்கவில்லை. 12 நாடுகள் புறக்கணித்தன. அவற்றில் இந்தியாவும் ஒன்று.
இலங்கைக்கு எதிராக இதற்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பல நெருக்கடியான நிலைகளில் ஆதரித்த இந்தியா, எது எப்படியும் போகட்டும் என்ற மனோபாவத்தில் மேற்கொண்ட அலட்சியமான முடிவு இது.
இந்தப் புறக்கணிப்புக்காக இலங்கை அதிபர் ராஜபட்ச உளம் மகிழ்ந்து, பாராட்டி இருப்பதும், இதற்குப் பரிசாக 93 இந்திய மீனவர்களை விடுதலை செய்திருப்பதும், இந்தியாவை மேலும் கேலி செய்வதுதானே தவிர வேறு ஏதும் இல்லை.

Sunday, March 23, 2014

சிறிலங்கா வருகிறது 'பௌத்த தீவிரவாதத்தின் முகம்'


மியான்மரில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டு வரும் 969 இயக்கத்தின் தலைவரான, அஷ்வின் விராது தேரர், சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

சிறிலங்காவில் உள்ள பௌத்த அடிப்படைவாத அமைப்பான, பொதுபல சேனாவின் அழைப்பின் பேரிலேயே விராது பிக்கு கொழும்பு வரவுள்ளார்.

'பௌத்த தீவிரவாதத்தின் முகம்' என்று  'ரைம்' சஞ்சிகையால் வர்ணிக்கப்பட்டவரே விராது பிக்கு.

அவரது ஒளிப்படம் தாங்கிய முகப்பு அட்டையுடன் வெளியான ரைம் சஞ்சிகையை சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

“நாம் அவரை அழைத்துள்ளோம். அவர் வரவுள்ளார். அவரை நாம் சந்திக்கவுள்ளோம்.

Thursday, February 13, 2014

கடந்து வந்த பாதையைத் திருப்பிப்பார்த்தல் - யதீந்திரா

[சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்தி, ஒரு விவாதத்திற்கான அழைப்பு]
எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ்
2014ம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையின் மீதான ஒரு பிரதிபலிப்பாகவே, இக்கட்டுரை அமைகிறது.

Wednesday, October 23, 2013

நீங்கள் மீண்டும் வரவேண்டும்!-ச. வி. கிருபாகரன்

உலக வரலாற்றில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் பல வெற்றி பெற்றன, சில தோல்வியுற்றன, ஒரு சில அறவே அழிந்துள்ளன. ஆனால் வெற்றி, தோல்வி அற்ற நிலையில் உலகில் தொடர்ந்தும் ஏதோ விதத்தில் ஆக்கிரமிப்பாளார்களான பௌத்த சிங்களவர்களுக்கு தொல்லை கொடுப்பதானால் அது தமிழீழ விடுதலைப் போராட்டமே.
2009ம் ஆண்டு மே மாதம் வரை பெய்து ஓய்ந்த மழையில் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்காய்பவர்கள், நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையென வாழ்பவர்கள் பலர்.
மனநோய் வைத்தியசாலையில் முடிந்தவர்கள் சிலர். எந்தவித வாழ்வாதாரமும் இன்றி வாழ்பவர், உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என ஏங்குபவர், இந்த வாரம் மாதம் வருடம் தன்னும் எம்மை விடுதலை செய்வார்களா என காத்திருப்போர் பல ஆயிரம்.
சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் தடுப்பு முகாம்கள் – கொலை களங்களாகவும், சித்திரவதை கற்பழிப்பு முகாம்களாகவும் மாறியுள்ளன. தொடர்ந்து எழுதுவதானால் ஆயிரம் கதைகள் உண்டு. மிகச்சுருக்கமாக, எமது தாயக பூமியில் அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலமபெயர் தேசத்தின் “அரசியல் சாம்பாரை”, “தமிழ்” என்ற கலப்புடன் ஆங்கில எழுத்தில் ஏ (A) யிலிருந்து சற் (Z) வரையும், உட்பூசல் நிறைந்த பல அமைப்புக்கள் திறமையாக குழப்புகின்றன.

Friday, April 05, 2013

மாணவர் போராட்ட வீச்சு ஒன்றுமட்டுமே உறங்கிக்கிடக்கும் ஊமைகளை தட்டியெழுப்பும் வல்லமை கொண்டவை.‏

உலகிலுள்ள மனிதாபிமானத்தை மதித்து நேசிக்கும் நாடுகள்,  மற்றும் முதல்த்தரமான பக்கச்சார்பற்ற சர்வதேச தொண்டரமைப்புக்கள்,
சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் மிகப்பெரிய அழுத்தத்தின் பின் 2010,ல் ஐநா, செயலாளர் நாயகம் பான் கீ மூன்.  அவர்களால்  உருவாக்கப்பட்டிருந்த,   இலங்கையில் நடந்த யுத்த மீறல் விவரணங்கள் பற்றிய ஆராய்வு,   தகுதிவாய்ந்த நிபுணர் குழுவினரால் கிட்டத்தட்ட ஒருவருடம் ஆராய்ந்து கண்டறிந்த தமது பூரணமான அறிக்கையை,  ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிடம் 2011,  ஏப்ரல் மாதம் நிபுணர்கள் குழு கையளித்திருந்தது.