நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக பல்வேறு நாடுகளும் எமக்கு உதவிகளை வழங்கின. அதேபோன்று அபிவிருத்திக்காகவும் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன. சர்வதேச நாடுகளும் முன்னெடுத்த ஒப்பந்தங்களை அபிவிருத்தி நோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பதவி ஏற்பு வைபவத்தில் கூறினார் மஹிந்தா.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள், யுத்தம், போதைப்பொருள், ஆயுதங்கள், ஊழல் மோசடிகள் ஆகியவை அற்ற நாடே எமக்கு வேண்டும். எனவும் மஹிந்தா பேசினார்.
தான் ஓய்வு பெற்றதன் பின்னர் இந்த நாட்டின் பிரஜையொருவர் "நீங்கள் இந்த நாட்டுக்காக செய்ய வேண்டிய பொறுப்புகளை ஒழுங்காகச் செய்துள்ளீர்கள்"என்று கூறினால் அதுவே எனது வெற்றியும் நான் செய்த வேலைகளுக்குமான திருப்தியுமாகும். என்று கூறிய தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் எந்த வார்த்தைகளையும் கூறவில்லை.
கூடவே ஆயிரம் போராளிகளையாவது மஹிந்த விடுவார் என எதிர்பாக்கப்பட்டது ஆனால் 100 பேரையே விடுவித்ததாக அரச வானொலி அறிவித்தது.
நாள்கோள் சாஸ்திரங்கள் பார்த்து திட்டமிட்டு நடத்தப்பட்ட மஹிந்தவின் பதவி ஏற்பு சுமார் 1000 மில்லியன் ரூபா வரை செலவு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகல் கூறியுள்ளன.
No comments:
Post a Comment