
இக்காணொளியில் இறுதியில் தோன்றும் யுவதியை உற்றுநோக்குங்கள். அவர் உங்கள் உறவினராகவோ, இல்லை உங்களுக்கு தெரிந்தவராகவோ இருக்கலாம். இவரைத் தெரிந்தவர்கள் இவருக்கு என்ன ஆனதோ என தெரியாமல் இருந்திருக்கலாம்.
பாருங்கள் அவ் யுவதியின் பரிதாபமான முகத்தோற்றத்தினை. பின்கைகள் கட்டப்பட்ட நிலையில் தோன்றும் இவ்யுவதி இறுதியில் என்ன ஆனாரோ? என குழம்பியபோது அதற்கு பதில் கிடைத்துள்ளது.
சிங்கள இராணுவத்திடம் பிடிபட்டு மேற்குறிப்பிட்ட காணொளியில் தோன்றும் பரிதாபகரமான பெண்புலி யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அவரது இயற்பெயர் உசாந்தினி , இயக்கப்பெயர் மதுநிலா, மது என எல்லோராலும் அழைக்கப்படுபவர். வயது 19. யுத்தகாலப்பகுதியில் மன்னார் ஆலம்குடா பகுதியில் இராணுவத்திடம் பிடிபட்டவரே இப்பெண் போராளி. இவர் யாழ் பண்டைத்தரிப்பை சேர்ந்தவர் ஆவார்.
இவர் கடந்தவருட யுத்தகாலப்பகுதியில் அதாவது 2009 ஜனவரி மாத இறுதியில் எதிரியிடம் சிக்குண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.


No comments:
Post a Comment