Tuesday, December 07, 2010

ஜப்பானிய கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்களை புலிகள் வாங்கினர்

விடுதலைப் புலிகள் ஜப்பானியக் கடலோரக் காவல்படையிடம் இருந்து நான்கு கப்பல்களை வாங்கியுள்ளதாக நம்பப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


“ஜப்பானின் கடல்சார் பாதுகாப்பு முகவரமைப்பு அல்லது கடலோரக் காவல்படையினால் பயன்படுத்தப்பட்ட நான்கு கப்பல்கள் புலிகளால் வாங்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.


இவற்றைப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாகவே புலிகள் வாங்கியுள்ளனர்.


‘புளூ ஹோக்‘(Blue Hawk) , ‘மகமய்‘ (Magamai) , ‘ரகுய்‘ (Rakuy), ‘எக்ஸ்போர்‘ (Expor) ஆகியக் கப்பல்களே புலிகளால் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வன்னிக்கு ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கடத்திச் செல்வதற்குப் புலிகள் இவற்றைப் பல வருடங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.


கிழக்கு கடற்பரப்பில் 2006 செப்ரெம்பர் 17ம் திகதி கல்முனைக்கு 120 கடல் மைல் தொலைவில் சிறிலங்கா கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட 22 மீற்றர் நீளமான கப்பல் ஜப்பானியக் கப்பல்களில் ஒன்று என நம்பப்படுகிறது.


1998ம் ஆண்டுக்குப் பின்னர் புலிகள் சுமார் 30 வெவ்வேறு ரகங்களைச் சேர்ந்த கப்பல்களைக் கொள்வனவு செய்தாக நம்பப்படுகிறது.


இவற்றில் பெரும்பாலானவை ஜப்பானிய நிறுவனங்களிடம் இருந்த வாங்கப்பட்டவையாகும்.


புலிகளிடம் சுமார் 30 கப்பல்கள் இருந்தன. அவற்றில் சிறிலங்கா கடற்படை சுமார் 12 கப்பல்களையே மூழ்கடித்துள்ளது.


இந்தியா ஒரு கப்பலை அழித்துள்ளது. மற்றொரு கப்பல் வேறொரு நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


சில கப்பல்களைப் புலிகள் கைவிட்டிருந்தாலும் கூட, குறைந்தது பத்துக் கப்பல்களாவது போர் முடிந்து ஒன்றரை வருங்டகளாகியுள்ள போதும் தொடர்ந்தும் சட்டபூர்வமான வணிகத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும்“ என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.Share 

No comments:

Post a Comment