அநியாயமாக சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் நீதி வேண்டியும், பொதுமக்களைப் பாதிக்கும் விடயங்களில் ஈடுபடும் நபர்களுக்கு தெய்வ தண்டனை கோரியும் அவர் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போன்று பொன்சேகாவை இயற்கையான முறையில் மிக விரைவில் மரணமடையச் செய்வதற்கான காய் நகர்த்தல்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஓரு கட்டமாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் பிரகாரம் பொன்சேகாவுக்கு இருதய சுவாசம் சம்பந்தமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான கருவியை வழங்குவதை இழுத்தடிக்கவுள்ளதாக பாதுகாப்பமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொன்சேகா ஒன்றில் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது பிச்சைக்காரன் போன்று நடுவீதிக்கு இறங்க வேண்டும் என்பதே கோத்தபாய ராஜபக்ஷவின் கடுமையான நிலைப்பாடாகும்.
No comments:
Post a Comment