சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் காணப்படுவதாகவும், அந்த சொத்துக்களை சுவீகரித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 1267ம் மற்றும் 1373ம் பிரகடனங்களின் சொத்துக்களை சுவீகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரகடனங்களை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கக் கூடிய சிக்கல்களுக்கு சர்வதேச நாணயம் நிதியம் தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 1267ம் பிரகடனத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள், பயங்கரவாதிகள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை முடக்குதல், பயணக் கட்டுபாடு விதித்தல், ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களை தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என இந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1373ம் பிரகடனம் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை பிரகடனங்களை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் குறைந்தபட்சம் 15 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் பல நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment