சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமெரிக்க சட்டவாளர் புருஸ் பெயின் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
மகிந்தவை முப்படைத் தளபதியாகக் கொண்டுள்ள சிறீலங்கா படைகள் தமிழ் மக்களிற்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகளுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 28ஆம் நாள் அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள, மூன்று தமிழர்கள் சார்பாக வழக்கைப் பதிவு செய்துள்ள சட்டவாளர் புரூஸ், முதற் கட்டமாக கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி முகவரியிலுள்ள அலரி மாளிகைக்கு மின்னஞ்சல் ஊடாக குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக படுகொலைகள் தொடர்பான ஹேக் உடன்படிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்படும் எனவும், வியன்னா தீர்மானத்திற்கு அமைவாக இராசரீக உறவுகளைக் குழப்பாத வகையில் வொசிங்கரன் டி.சியிலுள்ள சிறீலங்கா தூதரகத்திற்கு குற்றப்பத்திரிகை அனுப்பவும் நீதிமன்றிற்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment