இதுதொடர்பாக மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் திசநாயக்க தகவல் வெளியிடுகையில்,
வேகமான சனத்தொகை வளர்ச்சியால் மகாவலி வலயங்களில் காணிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. இவர்களுக்கு வவுனியா, பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள காணிகள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்படவுள்ளனர்.
மகாவலி வலயங்களில் வழங்கப்பட்ட காணிகள் இரண்டு துண்டுகளாகவே பிரிக்கக் கூடியவை. அதனால் மூன்றாவது தலைமுறையினருக்கு காணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைவிட குடும்பங்களில் அதிகளவு உறுப்பினர்களும் உள்ளனர்.
மணலாறில் உள்ள மகாவலி �எல்� மற்றும் பொலன்னறுவையில் உள்ள மகாவலி �டி� வலயங்களில் காணிகள் உள்ளன. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள், குடியிருப்புகள் போன்றவை தரமுயர்த்தப்பட வேண்டும். இங்கு இரு போகங்களும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுக்கும் நடவடிக்கைகளை மகாவலி அதிகாரசபை மேற்கொண்டு வருகிறது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி தெற்கிலும், கனகராயன் ஆற்றின் கரையோரங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் திட்டம் இலங்கை அரசிடம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணலாறு, தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமாகும்.
இதை வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்துள்ள இலங்கை அரசாங்கம் மகாவலி �எல்� வலயமாகப் பிரகடனம் செய்திருப்பதுடன் 1980களின் தொடக்கத்தில் இருந்தே சிங்களக் குடியேற்றங்களை நிறுவி வருகிறது.
விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்த காலங்களில் இங்கு சிங்களக் குடியேற்றங்களின் பரவல் தடுக்கப்பட்டிருந்த போதும் தற்போது தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment