Tuesday, February 22, 2011

திருமாவளவன் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்!

திருமாவளவன் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்!தேசத்தின் அன்னை பார்வதி அம்மாளின் இறுதிக்கிரிகைகளுக்காக இலங்கை சென்ற தொல்.திருமாவளவனை விமானநிலையத்தில் வைத்து இலங்கை அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை சென்ற
வேளை கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் அவர் தடுத்துவைக்கப்பட்டதாகவும், பின்னர் இந்தியாவுக்கு செல்லவிருந்த விமானத்தில் அவரை ஏற்றி இலங்கை அரசு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாளின் இறுதிக் கிரிகைகளில் மக்கள் கலந்துகொள்ளவதை இலங்கை இராணுவம் கட்டுப்படுத்திவரும் நிலையில், புலனாய்வுப் பிரிவினர் அங்கு நிற்பதால் மக்கள் செல்லவும் அச்சப்படுகின்றனர். இந் நிலையில், தமிழ் நாட்டுத் தலைவர்கள் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டே இலங்கை அரசு அவரைத் திருப்பி அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment