தமிழக அரசியலின் பல முக்கிய முடிவுகளை சிறுதாவூரில் இருந்து கொண்டே ஜெயலலிதா எடுத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிறுதாவூர் என்ற கிராமம் உள்ளது. சிறுதாவூரில் உள்ள பிரமாண்ட பங்களாவில் ஜெயலலிதாவும், அவரது உடன் பிறவா சகோதரி சசிகலாவும் அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பார்கள். இந்த பங்களா அமைந்துள்ள இடம் அங்குள்ள ஆதி திராவிடர்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டது. அரசாங்கத்தால் ஆதி திராவிடருக்கு வழங்கப்பட்ட நிலம் திட்ட மிடப்பட்டு அபகரிக்கப்பட்டதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. ஜெயலலிதாவுக்கு எதிராக மார்க்ஸிஸ்ட் கட்சி மிக மும்ரமாக இருந்த காலகட்டம். சிறுதாவூர் நிலம் அபகரிக்கப்பட்டதா என்ற உண்மையை அறிவதற்காக ஓய்வு பெற்ற நீதி பதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது. சிறுதாவூர் நிலம் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் வேறு பல காரணங்களினாலும் நீதிபதி கே. பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான அறிக்கை வெளிவருவது காலதாமதமானது. சிறுதாவூர் கிராமத்தில் உள்ள நிலமற்ற 20 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 2.50 ஏக்கர் வீதம் 1967 ஆம் ஆண்டு வருவாய்துறை வழங்கியது. “இந்த நிலத்தை 25 வருடங்களுக்கு விற்பனை செய்ய முடியாது. ஆனால் 1983 ஆம் ஆண்டு இந்த நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது. நிலத்தை விற்பனை செய்ததும் வாங்கியதும் சட்டப்படி விரோதமானது, எனவே அந்த நிலத்தை சட்டப்படி அரசு கையகப்படுத்த வேண்டும். அதனை ஏழை ஆதிதிரா விடர் அல்லது பழங்குடியினருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். பணத்துக்காக சட்டத்தை மீறியவர்கள் மீது எதுவித கருணையும் காட்டக் கூடாது' என்றும் கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிசன் பரிந்துரை செய்துள்ளது. ஏழைகளுக்கு வழங்கப்பட்ட சிறுதாவூரில் பிரமாண்டமான பங்களா கட்டியதற்காக ஜெயலலிதா மீதும், சசிகலா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. சிறுதாவூரிலும் சட்டவிரோதமாக வாங்கப்பட்ட நிலம் ஜெயலலிதா சசிகலா பெயரில்இல்லை. பரணி சோர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயலேயே சிறுதாவூர் பங்களா கட்டப்பட்ட நிலம் உள்ளது. பரணி சேர்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். சிறுதாவூர் நிலம் சட்ட விரோதமாக வாங்கப்பட்டது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு உண்மை என்பது கே. பி. சிவசுப்பிரமணியம் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. தமது குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டாடும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சிஇல்லை. காங்கிரஸ் கட்சி, திராவிட முன் னேற்றக் கழகம் ஆகியவற்றை முழுமூச்சாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட்கட்சி, இப்போது ஜெயலலிதாவின் பக்கம் சாய்ந்துள்ளது. தமிழகத்தில் எந்தக் கூட்டணியிலும் இல்லாத மார்க்சிஸ்ட் கட்சி அடுத்து வரும் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கும் மனநிலையில் உள்ளது. ஆகையினால் இதனைப் பெரிதுபடுத்துவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை. நீதிபதி கே. பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிசன் வெளியிட்ட அறிக்கை பற்றி ஜெயலலிதா எதுவும் தெரிவிக்கவில்லை. இதேவேளை, சிறுதாவூர் பங்களாவை அரசாங்கம் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்கு சகல முயற்சிகளையும் ஜெயலிதா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பிரபல நடிகையான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் என்ற செய்திகடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்
Sunday, February 06, 2011
முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரிடம் மதிப்பைப் பெற்ற குஷ்புவின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இருப்பவர் யார்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment