Thursday, February 10, 2011

ஆங்கிலம் கலப்பில்லாமல் தமிழில் பேச வேண்டும்: நடிகர் சிவகுமார்


ஆங்கிலம் கலப்பில்லாமல் மாணவர்கள் தமிழில் பேச வேண்டும் என நடிகர் சிவக்குமார் பேசினார்.

கோவை சரவணம் பட்டியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்றம் தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார்,

உலகத்தில் 3 ஆயிரம் மொழிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 மொழி செம்மொழியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தமிழ் மொழி. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் பிறந்து தமிழராக வாழ்கிறோம். தமிழ் பேசுகிறோம் என்பதை தவிர 100க்கு 90 பேருக்கு தமிழ் மொழி அதிகமாக தெரியாது என்பதுதான் சோகம்.


எனவே மாணவர்கள் தமிழில் உரையாடும் பொழுது ஆங்கில கலப்பில்லாமல் தூய தமிழிலேயே பேச வேண்டும். ஆங்கில கலப்பினால் தமிழ் தனது தனித்தன்மையை இழந்து விடுகிறது. கல்லூரி பருவத்தில் மாணவர்கள் ஒழுக்கத்தையும் கல்வியையும் இரு கண்களாக கொண்டு வள வேண்டும் இப்பருவத்தில் மாணவர்களுக்கு உடற்பயிற்சியும் மன பயிற்சியும் தேவை என்றார்.

No comments:

Post a Comment