தமிழீழத்தின் படம் பொறிக்கப்பட்டு நாடுகடந்த தமிழீழ அரசினால் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளை அமெரிக்கா அரசு அங்கீகரித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் த திவயின என்ற நாளேடு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவின் மூன்றில் இரண்டு பகுதியை தனதாகக் கொண்ட தமிழீழத்தின் படம் பொறிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றது.
அதற்கு சிறீலங்கா அரசு தனது கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளபோதும், அமெரிக்கா அதனை பொருட்படுத்தவில்லை. ஆனால் அதற்கான அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.
அடையாள அட்டையில் பொறிக்கப்பட்டுள்ள படத்தில் நீர்கொழும்பு மற்றும் கதிர்காமம் கூட ஈழத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் உத்தரவுக்கு அமைவாக இது மேற்கொள்ளப்படுகின்றது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment