தமிழையே கருவியாக்கி தமிழர்களை முளுவதுமாக அழிக்க மகிந்த அரசு திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. இத்திட்டத்திற்கு முளுக்க முளுக்க புத்த பிக்குகள் போல் வேடம் தரித்தவர்களையே சிங்கள அரசு பயன்படுத்த உள்ளது.
ஓய்வுபெற்ற பல்கலைக்கழக உயர் தமிழ் ஆசிரியர்களை வைத்து காவி வேடம் அனிந்த புத்த பிக்குகளுக்கு தமிழ் கற்பிக்கப்படுகின்றது. ஒருவர் இருவருக்கு அல்ல ஒரு பல்கலைக்கழகத்தில் குறைந்தது ஆயிரம் போலி பிக்குகளுக்கு தமிழ் கற்றுத்தரப்படுகின்றது.[பேரினவாதம் பேசும் பிக்குகள் அனைவரும் போலிதான்]
இதனால் தமிழ் வளரும்தானே எப்படி ஒழியும்? சிங்களவர்கள் அதுவும் அரசே தமிழ் கற்பிக்கின்றது என்றால் அது தமிழ் வளர்ச்சிக்காகவா இருக்கும்?. இவர்கள் அனைவரும் தமிழ் கற்று தேர்ந்தவுடன் அனைவரும் தமிழர் தாயக பகுதிகளுக்கு குடியேற்றப்பட உள்ளளர்கள் என்பது மட்டுமல்ல அதிர்ச்சித்தகவல் தமிழர்களை முற்று முளுவதுமாக கட்டாயத்தின் பேரில் புத்தத்திற்கு மாற்றுவது, தமிழர் பகுதிகளில் புத்த மடாலயங்கள் தேற்றுவித்து தமிழர் தாயக பகுதிகளை சிங்கள பெயரிட்டு அது பூர்வீக சிங்கள இடமாக பிரகடணப்படுத்துவது.
இப்படிப்பல திட்டங்கள் இவர்கள் மூலம் அரங்கேற்றப்பட உள்ளன. இது மட்டுமல்லாமல் தமிழ் இஸ்லாம் மக்களிடையே வேற்றுமையை தேற்றுவித்து பெரும் கலவரத்தை உருவாகச்செய்து பின்பு அடக்குகிறேன் கலவரத்தை என தமிழர்களை பெரும் எண்ணிக்கையில் கொல்லவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தவாரே உள்ளது.
ஒரு தமிழ் ஆசிரியர் தனது உறவினர்களிடம் தெலைபேசியில் பேசும் போது தாம் அரசாங்கத்தால் நிர்பந்திக்கப்படுவது மட்மல்லாமல் பிக்குகளின் இனவாத பேச்சுக்கள் தமக்கு பெரும் கோபம் அளிப்பதாகவும் இருப்பினும் தமக்கு வேறு வழியில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழர் நலன் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை முளுவதுமாக வெளிக்கொணர்ந்து உடைத்தெரிய வேண்டும்.
No comments:
Post a Comment