தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த வீரத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்கள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சிக்கு பெங்க்ளூர் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த வீரத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு பெங்களூர் கே.எஸ்.கார்டனில் வசிக்கும் தமிழீழ ஆதரவாளர்கள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புலவர் மகிபை பாவிசைக்கோ தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழர்களம் வார ஏட்டின் ஆசிரியர் டி.சி.பிரகாசம், பெரியார் திராவிடர் கழகத்தின் கருநாடக மாநிலத் தலைவர் மா.இராவணன், பொதுச்செயலாளர் இல.பழனி, மற்றும் குமார், கருநாடகா கன்னட தமிழ் பெடரேசன் தலைவர் ஐ.எம்.எஸ்.மணிவண்ணன், பெங்களூர் குடிசைவாசிகளின் பேரவைப் பொதுச்செயலாளர் எம்.மாரி, கருநாடகத் தமிழர் பொதுச் செயலாளர் செந்தில், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.வி.செல்வம் மற்றும் பல உணர்வாளர்கள் பெரும் திரளில் கலந்துகொண்டு வீரவணக்கத்தில் பங்கு பற்றினர்.
No comments:
Post a Comment