Thursday, February 24, 2011

யாழ்ப்பாணத்தில் இருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறியுள்ளது

[ வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011, 07:45.34 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகம் இன்று தொடக்கம் நிரந்தரமாக மூடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வன்னி மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்திக்
கொண்டு, அலுவலகங்களையும் பூட்டிக் கொண்டு வெளியேறியிருந்தது.
அவ்வாறான நிலையில் இன்று தொடக்கம் அதன் யாழ்ப்பாண கிளை அலுவலகம் உட்பட யாழ். மாவட்டத்தில் இயங்கி வந்த அனைத்து அலுவலகங்களும் நிரந்தரமாக மூடப்படவுள்ளதுடன், அதன் ஊழியர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் கொழும்பில் இருந்தபடி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் வழமை போன்று தொடரும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்ட உதவிப் பொறுப்பாளர் புளோரன்ஸ் ஜெனட் தெரிவித்துள்ளார்.

யாழ். அலுவலகங்கள் மூடப்பட்டமைக்கான காரணத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவிக்காத போதிலும், அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே வட பகுதியில் இயங்கிய அதன் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இன்று யாழ். அலுவலகங்களுடம் மூடப்பட்ட பின் வட பகுதியில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் ஒன்று கூட இயங்கப்  போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment