Tuesday, February 22, 2011

கடாபிக்கு தஞ்சம் வழங்க இலங்கை தயார்: மஹிந்த செய்தியனுப்பியுள்ளார்


லிபியத் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் அரசாங்கம் ஆபத்தில் சிக்கினால் அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை தயாராக இருப்பதாக இராஜதந்திர ரீதியில் செய்தியனுப்பப்பட்டுள்ளது.
 
கேணல் முஅம்மர் கடாபிக்கு எந்த நேரத்திலும் தஞ்சம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கொண்டிருப்பதாக வெளிநாட்டமைச்சின் மூலம் இராஜதந்திர ரீதியில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் உலகத் தலைவர்களில் கடாபி்யும் முக்கியமான ஒருவர் என்ற வகையிலேயே அவருக்கு அந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
லிபியாவின் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக லிபியத் தலைவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவர் உடனடியாக இலங்கை வந்து சேரும் பட்சத்தில் போதுமான பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் மற்றும் கடாபியின் புதல்வர் சைபுல் இஸ்லாம் ஆகியோரும் நெருங்கிய தோழமை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment