Sunday, February 13, 2011

யேர்மனி Ravensburg நகரில் எதிர்வரும் திங்கள்கிழமை 14 .02 .2011 அன்று கவனயீர்ப்பு நிகழ்வு



தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரத்துக்கு, இலங்கை தூதரிடம் பிஜேபி மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் அதிருப்தி தெரிவித்தார்.


இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் கரியவாசம் வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து பேசினார்.

அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் சுஷ்மா வெளியிட்டார்.

இலங்கையில் தமிழ் அகதிகளை மறுகுடியமர்த்தும் பிரச்னை குறித்தும் அவருடன் சுஷ்மா பேச்சு நடத்தினார்.

இதுகுறித்து டிவிட்ட தளத்தில் இட்ட பதிவில், "எனது வீட்டில் இலங்கை தூதர் கரியவாசத்தை சந்தித்தபோது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் பிரச்னையை எழுப்பினேன். அதற்கு பதில் அளித்த கரியவாசம், இந்திய மீனவர்களை கொல்வதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

இந்த பிரச்னையில் எனது கவலையை இலங்கை அரசின் மேல் மட்ட தலைவர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இந்த பிரச்னையில் நான் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்," என்று சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment