இலங்கையைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமையுடைய கோடீஸ்வரரான ராஜ் ராஜரட்ணம் ஹில்டன் ஹோட்டல் பங்குகள் தொடர்பாக கிடைத்த தகவல்களைக் கொண்டு ஒரே நாளில் பங்குச்சந்தையில் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமீட்டியுள்ளதாக அமெரிக்க ஜூரிசபை தெரிவித்துள்ளது.
பிளெக் ஸ்டோன் குழுமத்தினர் இந்த ஹோட்டலை ஜூலை, 2007ஆம் ஆண்டு கொள்வனவு செய்யும்போது இது நடந்துள்ளது.
இதேவேளை இச்சம்பவத்துடன் இரு அமெரிக்க இந்தியர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பங்குச் சந்தை தொடர்பான இரகசியங்களை முன்னரே தெரிந்து வைத்துக்கொண்டு பங்குச் சந்தையில் இலாபமீட்டி வந்துள்ளார் என இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இரகசிய உரையாடல்கள் அடங்கிய ஒலிநாடாக்கள் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்பட்டது. இன்டெல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ராஜிவ் கோயெல் இரகசிய தகவல்களை ராஜ் ராஜரட்ணத்திற்கு வழங்கியுள்ளார் என இவருக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள் வெளிப்படுத்தினர்.
இந்த வழக்கில் ராஜிவ் கோயெல் ஏற்கனவே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment