Tuesday, March 01, 2011

தமிழ்ச்செல்வனின் எதிரி மரணம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்களை நடத்தி இருந்த விமானியே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் இழந்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.

இவரின் பெயர் மொனாத் பெரேரா. விமானப் படையில் லெப்டினண்ட் பதவி வகித்தவர்.

காலி மாவட்டத்தை சொந்த இடமாக கொண்டவர். எனினும் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான நீர்கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்து இருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இவரின் பங்கு மிகவும் காத்திரமானதாக இருந்து உள்ளது.



இவரை கௌரவிக்கும் வகையில் விமானப் படையின் 60 ஆவது வருட நிறைவு விழாவில் கிபிர் விமான சாகசத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விபத்தில் இவரின் சகாவான வஜிர ஜெயகொடி உயிர் தப்பி உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் வசித்து வருபவர்.



விமானப் படையில் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கிபிர் விமான சாகசம் நிகழ்த்துகின்றமைக்காகவே இவர் பாகிஸ்தானில் இருந்து அழைக்கப்பட்டு இருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தில் இவரின் பங்களிப்பும் மிகவும் காத்திரமானது.



No comments:

Post a Comment