Monday, March 07, 2011

தமிழர்களின் போராட்ட எதிரொலி: பிரித்தானிய அமைச்சரை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவில்லை


அண்மையில் இலங்கை்கு வந்திருந்த பிரித்தானிய அமைச்சர் அலெஸ்ரயர் பேர்ட் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவை சந்திக்க விருப்பம் வெளியிட்டிருந்த போதிலும் அவரைச் சந்திப்பதற்கு பிரிட்டனில் தமிழர்கள் காட்டிய எதிர்ப்பின் எதிரொலியாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றச் செயலர் அலிஸ்ரயர் பேர்ட் கடந்த மாதம் இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
பிரித்தானியாவின் தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட முதலாவது உயர்நிலைப் பிரநிதிநிதி இவரேயாவார். இவரது பயணம் குறித்து கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தது.
இதையடுத்து இலங்கையின பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோருடன் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கும் பிரித்தானிய அமைச்சரின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் அதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களால் அவசரமாக நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மகிந்த ராஜபக்சவுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க பிரித்தானியா தவறி விட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்த பிரித்தானிய அரசாங்கம், தமது அமைச்சர்கள் இருவரினது கொழும்புக்கான பயணத்தையும் தடுத்திருந்தது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment