தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தென் சூடானில் எதிர்வரும் யூலை மாதம் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் தொலைபேசி ஊடாக நேற்று கோலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசும் போது தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து நேற்று கோலாலம்பூரில் நேற்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதில் நாடு கடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர்.
இவர்கள் அவுஸ்திரேலிய, மலேசிய நாடுகளுக்கு சென்று நாடு கடந்த அரசின் செயற்பாடு தொடர்பாக விளக்கி வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாகவே இந்த கூட்டம் நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசின் இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்கு ‘இந்தியாவின் நிலை’ முக்கியமானது என்று வலியுறுத்தப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவின் முக்கியத்துவம் பற்றிய நிலையை ஒப்புக்கொண்டார்.
அவ்விடயம் தீவிரமாக கவனிக்கப்படுவதாக கூறினார். எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான் நாடு, தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும்.
அப்புதிய நாட்டில் தமிழீழ அரசு அதன் தூதரகத்தை அமைக்க தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் அந்நாட்டின் மேம்பாட்டு செயல்திட்டங்களில் பங்கேற்று தென் சூடானின் மேம்பாட்டிற்கு உதவுமாறு தமிழீழ அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

No comments:
Post a Comment