Thursday, March 17, 2011

சுவிஸ் மாநகர சபைத் தோ்தலில் ஈழத் தமிழர் வெற்றி.!

சுவிஸ் வாழ் ஈழத்தமிழர் ஒருவர் அங்கு நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் முக்கிய நகரமொன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுவிஸின் முக்கிய நகரமான லவுசான் நகரில் நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தவரான நமசிவாயம் என்பவரே வெற்றி வாகை சூடியுள்ளார்.

சுவிஸ் சோஷலிசக் கட்சியின் சார்பில் அவர் தோ்தலில் போட்டியிட்டிருந்தார். அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட 85 வேட்பாளர்களில் அவர் பதினெட்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 5813 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு தமிழர்களின் வாக்குகளுக்கு மேலதிகமாக சுவிஸ் நாட்டவர்களும் வாக்களித்திருப்பதாக அறிய முடிகின்றது. ஜெனீவா மனித உரிமைப் பேரவைகளில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் துயரங்களை இராஜதந்திரிகளுக்கு விளக்கிக் கூறும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த காரணத்தால் அவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தார்.

No comments:

Post a Comment