Monday, May 16, 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஐ.நா தூதரக சந்திப்புக்களில் நாடு கடந்த அரச பிதிநிதிகள்! திங்கட்கிழமை, 16 மே 2011 15:11

ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் தூதரகங்களுடனான சந்திப்புக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவாதிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை கனடாவின் ஒட்டாவா நகரில் அமைந்துள்ள தென்னாபிரிக்க மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவாதிகளின் கனேடிய பிரதிநிதிகளான திரு.எஸ்.திருச்செல்வம், பாலன் ரட்ணராஜா, ஈசன் குலசேகரம், சுரேஸ் ரட்ணபாலன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.



மனித உரிமை மீறல்கள் எந்த வடிவில் இடம்பெற்றாலும் தமது நாடுகள் அதனை எதிர்த்து மற்றைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயற்படுமென்று மேற்படி தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பதவியில் மெக்சிக்கோ இருந்தபோது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்திருந்தது.

அத்துடன் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஐ.நா. அறிக்கையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment