சிறீலங்காவில் நடைபெற்ற போரின் போதும், அதன் பின்னரும் காணாமல்போன 600 தமிழ் மக்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிறீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தமிழத் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை (12) சிறீலங்கா அரசுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த விபரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
காணாமல்போனவர்களின் பெயரும், அவர்களை கைது செய்த சிறீலங்கா படையணிகளின் விபரங்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. போரின் போதும், அதன் பின்னரும் வீடுகளில் வைத்து கைதுசெய்யப்பட்டு காணாமல்போனவர்களின் விபரங்களே அந்த ஆவணங்களில் உள்ளன.
நாம் சமர்;பித்துள்ள இந்த ஆவணங்கள் குறித்து சிறீலங்கா அரசு அதிக அக்கறை செலுத்தும் என நாம் நம்புகிறோம் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment