Wednesday, May 04, 2011

தமிழ் மக்களின் அவலநிலை தொடர்கின்றது

வலைத்தூண்டல் பகுதியை சேர்ந்த மக்கள் போரினால் இடம்பெயர்ந்த வன்னி சென்றபோதும், தற்போது போர் நிறைவடைந்துள்ள நிலையில் தமது சொந்த கிராமத்திற்கு திரும்பி வாழக்கையை ஆரம்பிக்க விரும்புகின்றனர் ஆனால் அதற்கு சிறிலங்கா அரசு தடைகளை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரைக்கிரமமான வலைத்தூண்டலில் 1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மீன்பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண்டு 80 குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. அவர்கள் பேரினாலும், ஆழிப்பேரலை அனர்த்தத்தினாலும் இடம்பெயர்ந்து வன்னி சென்னிறருந்தனர். தற்போது, அவர்கள் மீள்குடியேறுவதற்கு முற்பட்டபோதும் அதற்கான உதவிகள் வழங்கப்படவில்லை.

தகரத்திலான 12 கூரைத்தகடுகளே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடிப்பதற்கும் சிறிலங்கா கடற்படையினர் அனுமதிகளை மறுத்துவருகின்றனர். சிறிலங்கா கடற்படையினரின் இந்த கெடுபிடிகளால் 16 குடும்பங்களே அங்கு திரும்பியுள்ளன. ஏனையவர்கள் மீள்குடியமர்வதற்கு அச்சம் தெரிவித்துள்ளனர்.

முன்னர் 80 குடும்பங்களாக இருந்த சனத்தொகை தற்போது 120 குடும்பங்களாக மாற்றம் அடைந்துள்ளதாகவும், தமது கிராமத்திற்கு திரும்பமுடியாது தாம் தொடர்ந்து வேதனைகளை அனுபவித்துவருவதாகவும் இடம்பெயர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment