கொழும்பு, மே.5: தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் நிதி உதவியுடன் புனரமைக்க இலங்கை முடிவுசெய்துள்ளது.அந்நாட்டின் அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதைத் தெரிவித்தார்.இந்தியாவின் உதவியுடன் அந்த துறைமுகத்தை புனரமைக்கும் அதிபர் ராஜபட்சவின் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக அந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.இதுதொடர்பாக இந்திய அரசுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக உள்ளது. 2 கட்டமாக அந்த துறைமுகம் மேம்படுத்தப்பட உள்ளது.துறைமுக விரிவாக்கம் இந்தியா, இலங்கை இடையே வர்த்தக மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்
First Published : 05 May 2011 06:33:18 PM IST source : dinamani
No comments:
Post a Comment