Saturday, May 21, 2011

இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவாரா நெடியவன்?


நோர்வேயில் வைத்துக் கைது செய்யப்பட்டு இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் நெடியவனை ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் இலங்கை அரசு கோரி உள்ளது. 

பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக நெடியவன் இலங்கையால் தேடப்பட்டு வருகின்றார் என்று இக்கோரிக்கையில் சுட்டி க்காட்டப்பட்டு உள்ளது. 

அத்துடன் நெடியவன் கைது செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டு உள்ளது. 

இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் நெடியவன் சம்பந்தப்பட்ட பேச்சுக்களில் ஈடுபட்டு உள்ளது.


No comments:

Post a Comment