ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாகவும் நிபுணர் குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான விதந்துரைகளை இலங்கை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்படும் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ஐநா நிபுணர்குழு அறிக்கை தொடர்பாகவும் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென நிபுணர் குழுவினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரை முக்கியமான ஓர் அபிவிருத்தியாகக் கருதப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
மேலும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பாரிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மெய்யான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைப் பொறுப்பாளர் கெதரீன் எஸ்தோன், நிபுணர் குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான விதந்துரைகளை இலங்கை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment