அலரி மாளிகையில் உள்ளுர் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களைச் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பொய்யான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஐ.நாவின் அறிக்கையையோ அல்லது அதில் அடங்கியுள்ள விடயங்களையோ அரசாங்கம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பழியை துடைப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் ஐ.நாவுக்கு பதிலளிக்கவுள்ளோம்.
போரின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக எந்தவொரு புள்ளிவிபரத்தையும் வழங்கும் நிலையில் நான் இல்லை.
ஏனெனில் போர் நடந்தபோது எவ்வளவு மக்கள் அந்தப்பகுதியில் இருந்தனர் என்பது குறித்த புள்ளிவிபரம் கிடையாது.
இராணுவ நடவடிக்கைகள் விடுதலைப்புலிகளினால் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட மக்களை மீட்பதற்காகவே நடத்தப்பட்டன.
இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையால் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஆதரவு முக்கியமானது.
இந்தியா ஐ.நா அறிக்கை தொடர்பாக பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பதிலை வழங்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment