Friday, May 27, 2011

ஐ.நா ம.உ மாநாட்டில் இலங்கைபற்றி விவாதம்: ஹங்கேரி தூதுவர் அதிர்வுக்கு தெரிவித்தார் !


சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற உள்ளது. இக் கூட்டத்தொடரை ஹங்கேரி நாடு தலைமை ஏற்று நடத்துகிறது. இம் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை குறித்து எந்த பிரேரணையையும் கொண்டுவரவில்லை என்று கூறப்படும் போதும், அமெரிக்க இலங்கை குறித்த பிரேரணை ஒன்றைக் கொண்டுவர உள்ளதாக அதிர்வு இணயத்துக்கு ஹங்கேரி நாட்டுத் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைக் கழகத்தின் ஹங்கேரி நாட்டு நிரந்தர வதிவிடப் பிரதிநிதி Isdan Lakatos அதிர்வுக்கு தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை குறித்த விவாதத்தை ஆரம்பிக்க வில்லை என்றும், இருப்பினும் அமெரிக்கா இது குறித்து ஒரு கவணயீர்ப்பு ஒன்றைக் கொண்டுவர உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனை அடித்து இம் மாநாட்டில் நிச்சயம் இலங்கை குறித்த விவாதம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பான விவாதமே இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளால் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் சீனா, ரஷியா ஆகிய நாடுகள் தலையிட்டு காப்பாற்றும் செயலை மேற்கொள்லாம் என்ற அச்சமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment