Sunday, May 29, 2011

அவசர வேண்டுகோள்: இன்று நடைபெறுவது சிங்களவர் ஆர்ப்பாட்டம் !

அவசர வேண்டுகோள்: இன்று நடைபெறுவது சிங்களவர் ஆர்ப்பாட்டம் !
29 May, 2011 by admin
இன்று ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக பிரித்தானிய பிரதமர் வாசல் ஸ்தலத்துக்கு முன்னர் ஆர்பாட்டம் இடம்பெறுவதாகவும், இதில் இலங்கையர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தமிழ் வின் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர்கள் என்று குறிப்பிட்டால் அது தமிழர்கள் முஸ்லீம்கள் மற்றும் சிங்களவர்களையும் உள்ளடக்கும் சொல்லாக அமைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ அவ்விணையம் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராகவே இந்த ஆர்பாட்டம் அமையவுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது சிங்களவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இச் செய்தியை சில இணையங்கள் இலங்கையர்களால் நடத்தப்படவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் சில தமிழர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இச் செய்தியை வாசிக்கும்போது, ஏதோ ஐ.நா அறிக்கைகை அமுல்படுத்த போராட்டம் நடப்பதுபோன்ற தோற்றப்பாடு இருக்கிறது. எனவே தமிழர்கள் இது குறித்து அவதானமாக இருக்கவும். சமீபத்தில் நடந்த தமிழர் போராட்டங்கள், மற்றும் இளையோர்களால் நடத்தப்படும் இலங்கை கிரிகெட் புறக்கணிப்பு போராட்டங்கள் போன்ற செய்திகளை திட்டமிட்டு புறக்கணித்துவரும் இவ்விணையங்கள், சிங்களவர் நடத்த இருக்கும் போராட்டத்துக்கு, ஆதரவு கொடுப்பது வருந்தத்தக்க விடையமாகும்.

இன்று இப் போராட்டம் நடக்கவிருக்கிறதோ இல்லையோ எனத் தெரியாத நிலையில் இதனை நேற்றே இவ்விணையம் விளப்பரப்படுத்துவது நாகரீகமான செயலாகத் தெரியவில்லை. அத்தோடு அதில் தாம் 10,000 கையெழுத்துகளை வாங்கியுள்ளதாகவும், அதனை நாளை பிரித்தானியப் பிடதமரிடம் கையளிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரித்தானியப் பிரதமர் G8 மாநாட்டில் உள்ளார். அவர் தற்போது பிரித்தானியாவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். தமிழ் மக்கள் இது குறித்து விழிப்புணர்வ்வோடு இருப்பது நல்லது. நாம் இதில் கலந்துகொள்ள வேண்டியது இல்லை !

பிந்திய செய்தி:

நாம் சுட்டிக்காட்டியதால் தமிழ் வின் இணையம் தனது செய்தியின் தலைப்பை மாற்றி தமது தவறை உணர்ந்து செய்தியை திருத்தி அமைத்துள்ளது. முன்னர் அவர்கள் வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன் ஷாட் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment