Monday, May 16, 2011

யாழ்-மாவிட்டபுரத்தில் மக்களை மிரட்டிய பசில்ராசபக்சே.

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதிக்கு விஜயம் செய்த கொலை பாதகன் மகிந்தவின் சகோதரன் பசில் ராசபக்சே அந்தப்பகுதி மக்களை மிரட்டிச் சென்றுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு வழங்கியிருக்கும் போர்குற்ற அறிக்கையால் மிரண்டு போயிருக்கும் மகிந்த கும்பல் அதனை யாழ் மக்கிளிடமும் வெளிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்று சென்ற பசில்ராசபக்சே இங்கிருந்துதான்(தமிழர் தாயகத்தில்) எல்லாத் தகவல்களும் வெளியே அனுப்பப்படுகின்றன. எல்லாம் எமக்குத் தெரியும். நீங்கள் தொடர்ந்து இவ்வாறான அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளைத் தொடர்ந்தால் அடையாளம் தெரியாமலே அழித்துவிடுவோம் என மிரட்டிச் சென்றுள்ளாராம்.

ஐயா பசிலாரே இனிமேல் உங்கள் மிரட்டல் உறுட்டல் எல்லாம் பலிக்காது. முதலில் உங்களை காப்பாத்திக் கொள்ளும் வழிகளை தேடிக்கொள்ளவும்.

புலம்பெயர் தமிழர்கள் புலிகளாக புதுப் பிறப்பெடுத்து அனைத்துலக நீதிமன்றங்களது கதவுகளை பலமாகத் தட்டி இனத்தை அழித்து மாபெரும் குற்றமிழைத்த ராசபக்சே கும்பலை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற உறுதியோடு போராடி வருவதால் திகைத்துப் போயுள்ள சிங்களம் இவ்வாறு சின்னப்பிள்ளைத் தனமாக ஏதுமற்றவர்களாக திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் இருக்கும் மக்களை மிரட்டி வருகின்றனர்.

ஈழதேசம்.

No comments:

Post a Comment