இதனைத்தொடர்ந்து போருக்கு பின்னரான நிலமைகள் தொடர்பாக தென்னாபிரிக்காவுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இராஜதந்திர முறையில் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு கூட்டிணைவான மூலோபாயம் ஒன்று தேவைப்படுவதாக சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
விரைவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கு நிலமைகளை விளக்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக வெளிவிவகார அமைச்சு பிரிட்டோரியாவில் உள்ள தமது தூதுவர் டி.விஜேசிங்கவிடமிருந்து விளக்க அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது.
இந்த அறிக்கையை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment