Friday, May 20, 2011

இலங்கை அரசை கவிழ்க்கும் தேவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கில்லை!

இலங்கையில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான தலையீடுகள் எதனையும் ஐரோப்பிய ஒன்றிம் மேற்கொள்ளவில்லை என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பேனாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக இலங்கையின் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவினுடை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உண்டு. ஆனால் இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்கின்ற முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபட்டுள்ளதான கருத்தில் எவ்வித உண்மையில்லை. அதை நான் முற்றாக நிராகரிக்கிறேன் என்று பேனாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசின் மீது மட்டுமன்றி வேறும் பல நாடுகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment