Wednesday, June 01, 2011

ஹொலிவூட்டுக்குள் காலடி எடுத்து வைத்த இலங்கைத் தமிழர்!



இலங்கைத் தமிழரும், படத் தயாரிப்பாளரான சந்திரன் இரத்தினம், புலிகளினால் கொழும்பு நகரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது போன்ற ஹொலிவூட் திரைப்படமொன்றை இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் பெயர் ஏ கொமன் மான்.

ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவூட் நடிகர் சேர் வென் கிங்ஸ்லி நடித்திருந்த பாத்திரம் ஒன்றை சார்ந்ததாக திரைக்கதை நகர்கின்றது. இப்படம் இலங்கை மற்றும் ஹொலிவூட் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி உள்ளது.


படத்தின் திரைக் கதை, இயக்கம் ஆகியவற்றை இலங்கைத் தமிழரான சந்திரன் இரத்தினம் மேற்கொண்டு உள்ளார். ஹொலிவூட் படம் ஒன்றை முதன் முதல் இயக்கி இருக்கின்ற இலங்கையர் என்கிற பெருமையை இப்படத்தின் மூலம் இவர் பெறுகின்றார். 27 நாட்களில் படப் பிடிப்பு பூர்த்தியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment