
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் கிழக்கில் முன்னெடுத்த போர் நடவடிக்கைகளின் போது கருணாவின் படையினர் அல்லது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் உதவியதாக இராணுவம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் முன்னெடுப்பு நடவடிக்கைகளின்போது களநிலைகளின் அல்லாமல் மற்ற பல தேவைகளுக்கு கருணா அணியினர் உதவியதாக மேஜர் ஜெனரல் சாகி கலகே தெரிவித்தார்.
இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட யுத்தவெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கில் சற்றுமுன்னர் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகள் கிழக்கில் பதுங்கியிருக்கக்கூடிய பகுதிகளில் கருணா அணியினர் நிலைகொண்டிருந்தனர். இதன்மூலம் விடுதலைப்புலிகளுடனான போரின்போது கருணா அணியினர் முன்னின்று உதவியதாக தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரியொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.
கருணா அணியினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இவர்கள் உதவியளித்ததாக 57 ஆவது டிவிசனைச் சேர்ந்த கொமாண்டர் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்குமாகணத்தின் தொப்பிகலை மற்றும் மன்னாரின் சிலாபத்துறை பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது சகி கலகேயும் ஒரு கட்டளை அதிகாரியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.Share 0
No comments:
Post a Comment