கடந்த 3ஆம் திகதி ஜெனிவாவில் சனல் 04 'இலங்கையின் கொலைக்களம்' என்ற பெயரில் சிறீலங்காவின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஆவணப் படத்தை திரையிட்டது.

இந்த ஆவணப்படம் கூடியிருந்த உறுப்பினர்களை மட்டுமல்ல அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியதை நேரடியாகப் பார்க்க கூடியதாக இருந்தது.
பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். பல உறுப்பினர்கள் இக் காணொளியை தொடர்ந்து பார்க்க முடியாமல் அரங்கைவிட்டு வெளியேறினர்.
சிறீலங்கா அரசின் இனப்படுகொலை காணொளியை பார்த்து ஆத்திரமுற்ற பார்வையாளர்களும் சில ஊடகவியலாளர்களும் கூடியிருந்த சிறீலங்கா பிரதிநிதிகளை நோக்கி தமது அதிருப்தியை தெரிவிக்க முனைந்தபோது கீழ்த்தரமான முறையில் அநாகரிமாக நடந்து கொண்டதையே நீங்கள் படத்தில் காண்கிறீர்கள்.
ஐநாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பிரதிநிதியே இவ்வளவு கீழ்த்தரமாக ஐநா அரங்கில் நடந்து கொள்ளும்போது சிறீலங்கா இராணுவத்தினர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தனியாகச் சொல்லவும் வேண்டுமா என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் கருத்து வெளியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
மனித இனமே வெட்கித் தலைகுனியும் ஈனச்செயல்களை சிறீலங்கா அரசு ஒரு இனத்திற்கெதிராக இழைத்ததை சனல் 04 ஆவணப்படுத்தியிருந்ததை பார்த்து பல நாட்டு உறுப்பினர்கள் அதிர்ந்து போயிருந்த தருணம் எந்தவித குற்றவுணர்வும் இன்றி சிறீலங்காவின் பிரதிநிதி ஊடவியலாளர்களையும் பார்வையாளர்களையும் பார்த்து இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டது சிறீலங்காவின் உண்மை முகத்தை ஐநா அரங்கில் வைத்து தோலுரித்திருக்கிறது
புதிய போர் குற்ற ஆதார வீடியோ ஜெனீவாவில் வெளியீடு: �
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைக் கழக மாநாடு நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இந் நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சி 45 நிமிட ஆவணப்படம் ஒன்றைப் போட்டுக்காட்டியுள்ளது. ஏற்கனவே கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்களைச் சுடும் காட்சிகளை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி தற்போது புது ஆதாரங்கள் அடங்கிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் குத்துயிரும் குலையுமாக உள்ள பெண்போராளிகளை சிங்கள இராணுவம் மற்றைய இறந்த உடலங்களோடு தூக்கிப் போடுவதும், அப் பெண்களின் அங்கங்கள் குறித்து பாலியல்ரீதியாக தகாத வார்த்தைகளில் கதைப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் உள்ள சில காட்சிகளை மனிதன் இணையம் இங்கே இணைத்திருக்கிறது.
நடைபெற்ற இக் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளரும் முக்கிய உறுப்பினருமான திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். மனித உரிமைக் கழகத்தினர், சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள், பன் நாட்டு பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் என மண்டபம் நிறைந்த இக் கூட்டத்தில் லிபியாவை உதாரணம் காட்டி திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் தொடுத்த கேள்விகளால் இலங்கைப் பிரதிநிதி மகிந்த சமரசிங்க திண்டாடியுள்ளனர். லிபிய அதிபரை போர் குற்ற அடிப்படையில் கைதுசெய்வதை நீங்கள் ஆதரிப்பீர்களா என சுரேன் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிகாரிகளுக்கு முன் இக் கேள்வி எழுப்பப்பட்டது இலங்கை அரசுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்ற விடையம் இலங்கை அரசின் பிரதிநிதியான மகிந்த சமரசிங்கவால் அக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதனை எதிர்த்த திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள், எத்தனைபேர் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக உண்மைகளை மறைத்துள்ளனர் எனக் கேள்விகேட்டுள்ளார். இலங்கையில் சாட்சி சொல்பவர்களுக்கு பாதுகாப்பு உண்டா எனக் கேள்வி எழுப்பிய சுரேன், சாட்சிகள் சொல்வோரைப் பாதுகாக்க ஒரு அமைப்பாவது உள்ளதா என வினவியுள்ளார். இதேவேளை மகிந்த சமரசிங்கவை புகைப்படம் பிடிக்க முற்பட்டவேளை அவர் தனது கைகளால் தன் முகத்தை மறைத்துக்கொண்டார் என மனிதன் இணையம் அறிகிறது.
45 நிமிடமாகக் காண்பிக்கப்பட்ட இக் காணொளிக்கு பின்னர் மகிந்த சமரசிங்கவிடம் கேள்விகள் கேட்கலாம் என்று 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. முதலில் பேசிய அமெரிக்க பிரதிநிதி, இலங்கை அரசை முதலில் பாராட்டிப் பேச ஆரம்பித்து, பின்னர் மிக விரைவாக சாடத் தொடங்கினார். இலங்கை அரசு தன்னை சர்வதேசத்தில் இருந்து அன்னியப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். சீனா ரஷ்யா பாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவுப் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசினர். பன் நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம் மாநாட்டில் கேள்விகளைத் தொடுக்க உலகத் தமிழர் பேரவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
பிரித்தானிய தமிழ் மனித உரிமை ஆர்வலர் திரு டேவிட் ஜோசப் அவர்களும் இக் கூட்டத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தார். இக் கூட்டத்தில் கலந்துகொண்ட கே.ரி ராஜசிங்கம் நீண்ட நேரமாக உரையாற்றியதோடு, இலங்கை அரசையும் பாராட்டிப் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

No comments:
Post a Comment