இது தொடர்பில் சிறீலங்காவுக்கான இஸ்ரேலியத் தூதுவர் மார்க் சொபர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது அரசியல் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டது.
எனவே ஐ.நா அறிக்கைக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தனது ஆதரவுகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேலின் இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசுக்கு பின்னடைவான விளைவுகளையே ஏற்படுத்தும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் ஆதரவினால் முஸ்லீம் நாடுகளின் ஆதரவுகளை சிறீலங்கா அரசு இழக்கலாம்.
மேலும் இஸ்ரேல் மீதும் மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சிறீலங்காவுக்கு ஆதரவுகளை வழங்குவதன் மூலம் தன் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இஸ்ரேல் சிறீலங்காவின் ஆதரவை பெற முனைகின்றது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment