அவுஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்திருக்கின்றது. அவுஸ்திரேலியாவின் சமஸ்டிப் பொலிஷார் இந்த விசாரணையினை ஆரம்பித்திருப்பதாக அவுஸ்திரேலியன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
போர்க் காலத்தில் இடம்பெற்ற
போர்க்குற்றங்களின் நேரடிச் சாட்சியமான அவுஸ்திரேலியப் பிரஜையான மீனா
கிருஷ்ணமூர்த்தியின் சாட்சியங்களுடன் விசாரணைகளை சமஸ்டிப் பொலிஸார்
முன்னெடுத்துவருவதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச,
போர்க்காலத்தில் வெளியுறவுச் செயலராக இருந்த பாலித கோகன தற்போதைய
அவுஸ்திரேலியாவிற்கான தூதுவரும் போர்க்காலத்தில் இலங்கைக் கடற்படைத்
தளபதியுமான திஸர சமரசிங்க ஆகியோருக்கு எதிராகவே இந்த விசாரணை
இடம்பெற்றுவருவதாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வழமைபோல திஸர சமரசிங்க இந்த விசாரணைச் சம்பவத்திற்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment